எம்.ஜி காமெட் ஈ.வி.கார்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு!!


6.98 இலட்சம் ஆரம்ப விலையாக  எம்.ஜி காமெட் ஈ.வி.கார்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு. சின்னியம்பாளையத்தில் உள்ள எம்.ஜ.கோயமுத்தூர் ஷோரூமில் முன்பதிவுகள் துவக்கம்.

எம்.ஜி மோட்டார் நிறுவனம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் எம்.ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதில் எலக்ட்ரிக் வகை மாடலான எம்.ஜி காமெட் ஈ.வி.கார்களுக்கு அதிரடியாக சலுகை விலை அறிவித்துள்ளனர். அதன் படி ஆரம்ப விலையாக 6.98 இலட்சத்தில் எம்ஜி காமெட் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி. கோயமுத்தூர் ஷோரூமில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் சீனியர் சேல்ஸ் மேனேஜர் மருதாச்சலம்,மற்றும் பொது மேலாளர் சத்யநாராயணன் ஆகியோர் பேசினர். எம்ஜி காமெட் ஈவிபேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் ஆகிய மூன்று வெவ்வேறு வகைகளில் இருப்பதாகவும்,ஆப்பிள் கிரீன்,ஒயிட்,சில்வர்,பிளாக் மற்றும் ரெட் என ஐந்து வண்ணங்களில் கிடைப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாக்கும் முதன்மை வாகனமான காமெட்   EV ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 230 கி மீ.வரை பயணம் செய்யக்கூடிய,  பேட்டரி வரம்பைக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர். எளிதாக ஓட்டவும்,பார்க்கிங் செய்யவும் ,எளிதாக சார்ஜ் செய்வது என அனைவரும் விரும்பும் விதமாக இந்த காமெட் வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments