ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி உச்சி மாநாடு துவக்கம்!!
ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி & உச்சி மாநாடு 2024 இன்று முதல் மூன்று நாட்களுக்கு கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.
ஜூபிலன்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை நடத்தும் 'ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ & உச்சி மாநாடு 2024' கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று துவங்கியது.
இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில் ஸ்டார்ட் அப் நிலையில் உள்ள நிறுவனங்கள் முதல் சிறு மற்றும் நடுத்தர அளவில் உள்ள தொழில் நிறுவனங்களை (SMBs) சார்ந்தவர்கள் வரை பங்கேற்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜவுளி, உணவு, கட்டுமானம், பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய சிந்தனையாளர்கள், இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் 22 நாடுகளில் இருந்து 200+ தொழில்முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தொழில்துறையினருக்கு அவசியமான தலைப்புகளில் குழு விவாதங்கள், தொழில்நுட்பம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் நிபுணர் உறை ஆகியவை பற்றி 75"க்கும் அதிகமான அனுபவமிக்க பேச்சாளர்கள் பேசினர்.
கொடிசியா வர்த்தக வளாகத்தின் "A" அரங்கத்தில் மாநாடும் "B" மற்றும் சி அரங்கங்களில் கண்காட்சியும், உணவு அரங்கத்தின் அருகே உள்ள சிறு அரங்கில் அரசு திட்டங்கள், அரசு வழங்கும் வணிக ரீதியான உதவிகள் உள்ளடக்கிய 50க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் நடைபெறவுள்ளன.
மேலும் கொடிசியாவில் B மற்றும் C அரங்குகளில் நடைபெறும் எக்ஸ்போவில் மொத்தம் 450 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு (StartupTN) மற்றும் ஃபேம் தமிழ்நாடு (FaMe TN) ஆகிய நிறுவனங்கள் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் அப் தமிழ்நாட்டின் மிஷன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் 'தி ஸ்டார்ட் அப்ஸ்' என்ற தலைப்பில் தொடக்க உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கிஸ் ஃபிளேவின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-சீனி, போத்தனூர்.
Comments