தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாவீரன் சுந்தரலிங்கம் பெயரை வைக்கவும் குடியரசு தின விழாவில் வடிவும்மாள் பெயரில் விருது வழங்கவும் தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை. !!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் மணி மண்டபத்தில் மார்பளவு கற்சிலையை அகற்றி குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை அமைத்து கொடுத்தமைக்கு அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக தழிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு , நெஞ்சார்ந்த நன்றியை தெருவித்து கொள்கிறோம். மேலும் 225 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் முதலாக தனது உயிரை துச்சமாக நினைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி ஆங்கில யேர்களை அழித்த மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு தூத்துகுடி விமான நிலையத்திற்கு அவரின் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கும் படி அன்புடன் கேட்டு கொள்கிறோம். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


மேலும் சுதந்திரா போரட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் துனைவியார் வடிவு அம்மாள் அவர்கள் மாவீரன் சுந்தரலிங்கனார் அவருடன்   வெடிமருந்து கிடங்கை நெருப்பு வைத்து அழித்து சுந்தரலிங்கனாருடன் உயிர் தியாகம் செய்தது தாங்கள் அறிந்ததே, ஆனால்

அவருடைய உயிர் தியாகம் வெளி உலகம் அறியாமல் உள்ளது, எனவே தாங்கள் அரசு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கபடும் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கு தியாகி வடிவம்மாள் பெயரில் பதக்கம் வழங்கி உலகறிய செய்ய வேண்டும், மற்றும்  சுந்தரலிங்கனார் மண்டபம் எதிரே உள்ள பீரங்கி மேட்டை புனரமைத்து வடிவம்மாள் பெயரில் பூங்கா மற்றும் சிற்பங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்  அகில இந்தியா மாவீரன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் LK முருகன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments