அனுஸ்ரீ ஹோம்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது!!


கோவையில் நடைபெற்ற அனுஸ்ரீ ஹோம்ஸ்  ஒரு நாள்  கிரிக்கெட் தொடர் போட்டியில் 16 அணிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி,கொசினா ஆகியோர் சார்பாக கிரக்கெட் போட்டி கொடிசியா பின்புறம் உள்ள மைதானத்தி்ல் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஏழு ஓவர் கொண்ட தொடராக நடைபெற்றது.

நாக் அவுட் சுற்றுகளாக நடைபெற்ற இதில் இறுதி போட்டியில் லெவன் ஜெயின்ஸ் மற்றும் டி செவன் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் டி செவன் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக  லயன்ஸ் கிளப் கூட்டு மாவட்ட தலைவர் ராம்குமார்,பள்ளபாளையல் ஊராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ்,நேரு நகர் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் செந்தில் குமார்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி முன்னாள்  தலைவர் முத்துவேல், லயன்ஸ் கிளப்  அக்சயம் பொருளாளர் கர்ணன்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி தலைவர் வெங்கடேசன்,துணை தலைவர் தினேஷ் குமார், கொசினா செயலாளர் சேகர்,ஆகியோர் கலந்து கொண்டு ரொக்க பரிசுகள்,கோப்பை ஆகியவற்றை வழங்கினர்.

கனகராஜ் மற்றும் கோவை பிரபு ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறந்த வீர்ர்களுக்கு ஹெல்மெட்,கிரிக்கெட் பேட், குக்கர், ஹாட் பாக்ஸ்,உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

-சீனி, போத்தனூர்.

Comments