தமிழக அரசின் கலைச்செம்மல் விருது பெற்ற கோவில்பட்டி ஓவியர்!!


தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறையின் கலைச் செம்மல் விருது கோவில்பட்டி ஓவியர் வேல்முருகனுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைகுழு வாயிலாக மரபுவழிமற்றும் நவீன பாணி கலை பிரிவுகளைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவிய,சிற்பக் கலைகளில் செய்து வரும் அரிய சாதனைகளை பாராட்டும் வகையில் கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023-24 ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தஞ்சை மரபு வழி ஓவியர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது.

1942ல் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில்  படுகாயம் அடைந்த மாடசாமி முதலியாரின் பேரன் வேல்முருகன் ஆவார்.

இவர் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர்.மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தஞ்சை ஓவியங்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.

சென்னை இசைக் கல்லூரியில் நடந்த கலைச் செம்மல் விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலைச்செம்மல் விருதுடன் ரூ1லட்சம் காசோலையும்  கோவில்பட்டி ஓவியர் வேல்முருகனுக்கு வழங்கினார். கலைச்செம்மல் விருது பெற்ற வேல்முருகனை சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி, உள்பட கோவில்பட்டி பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் பாராட்டினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments