வால்பாறை பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அவதி!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் தற்பொழுது புதிதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி  சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வால்பாறை பகுதியில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது மேலும் குளிர்ந்த காற்று வீசுகிறது எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்களுடைய சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால்தான் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வராமல் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்  சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் 

மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments