அய்யா வைகுண்ட தர்மபதி 192 வது அவதார திருநாள் ஊர்வலம்!!

குமரி மாவட்டம்  அய்யா வைகுண்டரின் 192_வது அவதார தின விழாவை முன்னிட்டு இன்று 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு குருசாமி  தலைமையில் புறப்பட்ட ஊர்வலத்தில்  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார்.

இவருடன், குமரி கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன்,மாநில கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜன்,  நாகர்கோவில் மண்டல கழகச் செயலாளர் ஜெயகோபால், அகஸ்தீஸ்வரம் தெற்கு  ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்,நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன்,40-வது வட்டக் கழக செயலாளர்,கிழக்குப் பகுதி மாவட்ட பிரதிநிதி மகாதேவன், நாகர்கோவில் மாநகர அம்மா பேரவை செயலாளர் வேலாயுதம்,  சாமிதோப்பு ஊராட்சி பொறுப்பாளர் பார்த்தசாரதி,  தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் S.C.வெங்கடேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

-இந்திரன், கன்னியாகுமரி.

Comments