மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 8.80 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்...

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால்  பல்வேறு சாலைகள்  சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 8.80 கோடி மதிப்பில் 67 சாலை மற்றும் பவர் ப்ளாக் 61 சாலை என 128 சாலைகள் அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா  அவர்கள் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்  வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ்  பாரதிராஜா அந்தோணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments