மழலையின் சாதனைக்கு பொழியும் பாராட்டு மழை !

கோவை கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழக பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளை பெற்ற 2 வயது மழலை குழந்தை !!

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25). இந்த தம்பதிகளின் குழந்தை சாய் சித்தார்த் (வயது 2). பிறந்த நாள் முதல் மிகவும் சுறு, சுறுப்பாக காணப்படும் சாய் சித்தார்த். 

இந்த வயதிலேயே தேசிய கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக தெரிவிக்கின்றார். இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார். உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். 21.52 வினாடிகளில் 28 இந்திய மாநிலங்களையும், உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும் 11 வினாடிகளில் கண்டறிந்து, உலகின் ஏழு அதிசயங்களை 8.95 வினாடிகளில் கண்டறிந்து, 195 கொடிகளை மிகக் குறுகிய நொடிகளில் சொல்லி 10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து பேசிய சாய் சித்தார் குடும்பத்தார், சிவில் சர்வீஸ் தேர்வு தயாராக பல்வேறு புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கின்றோம். உலகம், இந்திய வரைபடங்களை வீட்டில் வாங்கி வைத்திருந்து போது, அதனை பார்த்தார் குழந்தை சாய் சித்தார்த். இந்த நிலையில் ஒவ்வொரு கண்டங்கள் பெயர்கள் மற்றும் இந்திய வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் பெயர்களை அவனுக்கு சொல்லிக்கொடுத்தோம். இதை அவன் புரிந்து கொண்டான். 21.7 வினாடிகளில் இந்திய வரைபடத்தை வைத்து மாநிலங்களின் பெயரையும், அதனை தொடர்ந்து உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயரை 11.42 வினாடிகளில் கண்டறிந்து சாதனை படைத்தான். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. சாய் சித்தார்தின் திறமையை பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் அவருக்கு “ வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் “ என்ற பட்டத்தை அளித்து கெளரவ படுத்தியடுத்து .

லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், குழந்தைகை பாராட்டி பதக்கம், சான்றிதழ் தந்து கெளரவ படுத்தியது. தேசிய கொடியை வைத்து ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளை அடையாளம் கண்டதற்காக ஆஸ்கார் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார். மழலை குழந்தை சாய் சித்தார்த்தின் இந்த சாதனைகள் நோபல் வேர்ல்ட் ரெகார்ட், இன்டர்ஷேனல் புக் ஆப் ரெக்கார்டு, வேர்ல்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டு உள்ளிட்ட புத்தகங்களிலும் இடம்பிடித்து உள்ளது.வீட்டில் டி.வி.பயன்பாட்டை குறைத்துவிட்டோம். குழந்தைக்கு விளையாட, வீடியோ பார்க்க மொபைல் தருவதில்லை. அறிவுசார் விடயங்களை, செயல் முறை விளக்கங்களுக்கே முன்னுரிமை தருகின்றோம். நவீனமயான உலகில் குழந்தைகளிடம் மொபைல் ஃபோன் உள்ளிட்டவற்றை தரமால், அவர்களின் எதிர்காலம் நல்ல வகையில் அமைய, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் உரிய பழக்கங்களை கற்று தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

-சீனி, போத்தனூர்.

Comments