சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி துவக்கம்!!

கோவையில் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி துவக்கம்.

இஇபிசி இந்தியாவின் வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் துறையில் இந்தியாவின் திறன்களைச் சர்வதேச கொள்முதலாளர்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி இது. கொடீசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் அடுத்த இரண்டு நாட்கள், மார்ச் 6ஆம் தேதி வரை, இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இந்தியாவின் உள்நாட்டு பொறியியல் திறன்களை உலகத்துக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி வளர்ந்து வந்துள்ளது. வழக்கமான சந்தைகளை மட்டும் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைப்பதற்காகவும், இந்தியாவுக்குள்ளேயே புதிய சந்தைகளை உருவாக்குவதற்காகவும், புதிய பங்குதாரர்களையும் கூட்டு முயற்சிகளையும் மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவுக்கும் இதர வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகத்தை அதிகப்படுத்தவும், வெளிநாட்டு அமைப்புகள், இந்தியாவை நிலையான கொள்முதல் தளமாக பார்க்கவும் இந்தக் கண்காட்சி உதவி செய்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி XIயில், #ஸ்மார்ட் சஸ்டெய்னெபிள் இஞ்சினியரிங் (#Smart Sustainable Engineering) என்பது தான் மையக் கருப்பொருள். இது உற்பத்தித் துறையில் உள்ள நேர்த்தியான உற்பத்தி மற்றும் நீடித்த உற்பத்தி ஆகிய முறைகளின் ஒருங்கிணைந்த வடிவம் ஆகும். நேர்த்தியான உற்பத்தி என்பது பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஓர் உத்தி ஆகும். அதே சமயம் நீடித்த உற்பத்தி என்பது பொறியியல் துறையினர் மத்தியில் சமீபத்தில் வளர்ந்து வரும் ஓர் உத்தி ஆகும். இதன்படி, மூலபொருள்களைப் பெறுவதில் இருந்து, பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் அதன் கழிவுகளை நீக்குவது வரை அனைத்து உற்பத்தி நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.

நேர்த்தி மற்றும் நீடித்த உற்பத்தி என்பது தனித்தனியான உத்திகள் அல்ல. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. ‘சுயநிர்ணய இந்தியா’ திட்டத்தின் கீழ், நீண்டகால நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சி தான் நோக்கம். அதனால், உற்பத்தியாளர் நீடித்த வளர்ச்சியைக் கொண்டுவர புதுமையான வழிமுறைகளை பின்பற்றத் தொடங்க வேண்டும். அல்லது, புதுமைகள் பொறுப்புணர்வோடு செய்யப்பட வேண்டும் என்பதே இதன் பொருள் என்று, இன்று தொடங்கப்பட்ட ஐ.இ.எஸ்.எஸ். XI கண்காட்சியில்  இஇபிசி இந்தியா தலைவர் திரு. அருண் குமார் கரோடியா கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், இந்திய அரசின் வர்த்தகத் துறை இணைச் செயலாளர் திரு. விபுல் பன்சால், இ.ஆ.ப.; இமாச்சலப் பிரதேச அரசின் முதன்மை செயலாளர் திரு. ஆர்.டி. நசீம், இ.ஆ.ப.; தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் செயலாளர் திருமதி. அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப.; இஇபிசி இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் திரு. பங்கஜ் சட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments