தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் சார்பாக முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!


கோவை குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் சார்பாக ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்குவது,மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது மற்றும் புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் அன்னை ஹப்சா ரலி மகளிர்  அரபிக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு ஆலிமா ,ஹப்ஸிய்யா பட்டமளிப்பு விழா,மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது,புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழா தாஜுல் இஸ்லாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் தலைவர் ஹாஜி முகம்மது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற இதில் தலைமை இமாம் அப்துல் மாலிக் சிராஜி தொகுத்து வழங்க  செயலாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் ஆடிட்டர் அசனார்,பொருளாளர் காஜா முகம்மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை மேனேஜர் சுலைமான் வாசித்தார்.முத்தவல்லி ஹாஜி  அக்பர் அலி,வாழ்த்துரை வழங்கினார்.ஆலிமாக்களுக்கு மன்பவுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வர் முகம்மது அலி இம்தாதி ஹஜ்ரத்,மற்றும் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் சொல் முரசு அபுதாஹீர் பாகவி பாஜில் தேவ்பந்தி ஆகியோர் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் இறுதியாக, மௌலானா மௌலவி அல்ஹாஜ் அப்துல் அஜீஸ் துவா ஓதினார்.இதனை தொடர்ந்து  துணை தலைவர் முகம்மது ஃபாரூக் நன்றியுரை வழங்கினார்.

-சீனி, போத்தனூர்.

Comments