எட்டயபுரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்!! போலீசார் விசாரணை!!

எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்துலாபுரம் பாலத்தின் அடியில் நேற்று முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. மேற்படி பிரேதத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நபர்,  புளு கலர்  SKC என்று எழுதப்பட்ட ஜட்டி டைப் டிரவுசர் அணிந்திருந்தார். மேலும் இடுப்பில் கருப்பு கலர் அரைஞாண் கயிறு ஆகியவற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே மேற்படி இறந்த நபரை பற்றி பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments