கோவையில் நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு!! காவல்துறையினரின் விளக்கம்...!!!

18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாநகர காவல்துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவே இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும் இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது

இதனிடையே பாஜக மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பாஜக வினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments