குமரகுரு கல்லூரியில் விளையாட்டு அறிவியல் தேசிய மாநாடு!!

கோவை குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் கலையரங்கில், குமரகுரு ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துவக்கத்துடன், விளையாட்டு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாட்கள் தேசிய விளையாட்டு அறிவியல் மாநாட்டை  நடைபெற்றது.

இந்த நிகழ்வானது குமரகுரு நிறுவன தலைவர் சங்கர் வாணவராயர் தலைமையில் , முதல்வர் விஜிலா கென்னடி வரவேற்புரையில், சிறப்பு விருந்தினர்களாக நியூ ஹொரைசன்ஸ் அலையன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ரவ்னீத் கில் , ஆர்த்தோ-ஒன் எலும்பியல் சிறப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் டேவிட் வி.ராஜன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் 17 தொழில்நுட்ப அமர்வுகள் இடம் பெற்றுள்ளன , 7 மாநிலங்களில் இருந்து விளையாட்டுத் துறையைச் சேர்ந்த தங்கள் நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்ள 40 பேச்சாளர்கள், 51 வல்லுநர்கள், விளையாட்டுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 27 ஆசிரியர்கள் 17 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள், 38 விளையாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள், விளையாட்டு சங்கங்களிலிருந்து 55 பங்கேற்பாளர்கள், விளையாட்டு அகாடமி மற்றும் விளையாட்டுத் தொழில்முனைவோர் 47 உறுப்பினர்கள், ஆராய்ச்சி யாளர்கள் பயிற்சியாளர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர் .

-சீனி, போத்தனூர்.

Comments