இரயில்வே கேட்டினை சேதப்படுத்திய லாரி ஓட்டுனர் கைது!!!


கடந்த 11/3/24 அன்று இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரியானது இரயில்வே கேட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது. மேலும் வண்டியின் ஓட்டுனர் அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சவுரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை ( RPF ) மற்றும் ரதீஷ் பாபு, உதவி ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை, கோவை ஆகியோர்களின் உத்தரவின் பேரில் கிரீஸ், ஆய்வாளர், RPF , கோயம்புத்தூர் அவர்களின் மேற்பார்வையில், திரு. பாலையா உதவி ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மற்றும் திரு. ராஜா காவலர், RPF, கோயம்புத்தூர் ஆகியோர் குழுவாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வந்தது. சம்பவ இடத்திலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், நேரடி சாட்சிகளை விசாரித்தும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வண்டியை அடையாளம் காண முயற்சி செய்து வந்தனர். 

இந்நிலையில் 18/3/24 அன்று சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன் வயது 22 என்ற ஓட்டுனரை கைது செய்தும், வண்டியை பறிமுதல் செய்தும் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments