லட்சக்கணக்கில் செலவிடப்பட்ட கட்டிடம் வீணாகும் அவல நிலை!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் ஆரம்ப மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு வால்பாறை சோலையார் டேம் உருளிகல் பெரியார் நகர் வாட்டர் ஃபால் ஆகிய பகுதிகளில் காலை உணவு திட்டத்திற்கான பல லட்ச ரூபாய் செலவில் கட்டிடங்கள் அமைத்தனர்.
இதில் வால்பாறை மற்றும் சோலையார் டேம் பகுதியில் மட்டும் கட்டிடம் நடைமுறைக்கு வந்துள்ளது பின்பு உருளிக்கல்பெரியார் நகர் பகுதி வாட்டர் ஃபால் பகுதியில் கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது மேலும் இப்பகுதியில் வங்கி மூலம் காலை உணவு திட்டத்திற்கு என வாகனங்கள் வால்பாறை நகராட்சி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த வாகனங்கள் இருந்தும் வால்பாறையில் தனியார் வாகனம் செயல்பட்டு கொண்டுள்ளது.
இதற்கு வால்பாறை ரெப்கோ வங்கி சார்பாக வாகனங்கள் ஒதுக்கப்பட்டனர் இந்த வாகனம் நடைமுறையில் செயல்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த வாகனம் நடைமுறைக்கு வந்தால் வால்பாறையில் உள்ள டெண்டர் விடப்பட்ட வாகனம் நிறுத்தி விடப்பட வேண்டும் இந்த வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்தி களுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்..
Comments