போதைப் பொருள் விவகாரம் திமுக அரசை கண்டித்து கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!


போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஇதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று (04.03.2024) திங்கட்கிழமை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில்  நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொது மக்கள் என  திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

-கன்னியாகுமாரி, இந்திரன்.


Comments