வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு புதிய ஆலோசனை மையம் கோவையில் துவக்கம்!!


வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் , பல்கலைக்கழக விருப்பங்கள், சேர்க்கை செயல்முறை, உதவித்தொகை வாய்ப்புகள், விசா தேவைகள் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான பிற அத்தியாவசிய அம்சங்கள் என அனைத்து விதமான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன் கோவையில் தனது சேவையை துவக்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தற்போது வெளிநாடுகளில் சென்று கல்வி பயில்வதில்,  இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிரித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் சென்று கல்வி பயில அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  இதி போன்று செல்லும் மாணவர்களுக்கு நல்ல ஆலோசணைகளை வழங்கும் விதமாக மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன் மற்றும் கே 5 (K Five)  கன்சல்டிங் உடன் இணைந்து புதிய ஆலோசனை  மையத்தை கோவையில் துவக்கி உள்ளனர்.கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையில் துவங்கி உள்ள இம்மையத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக  கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி குழுமங்களின் கல்வியியல் இயக்குனர் முனைவர் சங்கர் கலந்து கொண்டு புதிய ஆலோசணை மையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து புதிய ஆலோசணை மையம் வழங்க உள்ள சேவைகள் குறித்து,கே 5 நிறுவனங்களின் தலைவர் பாலகுமார் மற்றும் மென் காம்ப் நிறுவனத்தின் இந்திய டைரக்டர் மார்க்கெட்டிங் ரோகித் சதீஷ் ஆகியோர் பேசினர்.

வெளிநாட்டில் படிக்கத் திட்டமிடும் மாணவர்களுக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடத் தேர்வுகள் உள்ளன. மேலும் விசா நடைமுறைகள்,பாதுகாப்பான தங்குமிடம்,உணவு உள்ளிட்ட அனைத்து விதமான தேவைகளுக்கும் இந்த மையம் ஆலோசணைகள் வழங்குவதோடு மாணவர்களின் துறை சார்ந்த, பல்கலைக்கழக விருப்பங்கள், சேர்க்கை செயல்முறை, உதவித்தொகை வாய்ப்புகள், விசா தேவைகள் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான பிற அத்தியாவசிய அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த மையம்  வழங்கும் என தெரிவித்தனர். தற்போது நமக்கு மிக அருகில் உள்ள துபாய் நாட்டிலும் வெளிநாட்டு பல்கலைகழக மேற்படிப்பு வாய்ப்புகள் இருப்பதாகவும்,இது அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments