தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நாகர்கோவில் வரும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு கால்கோள் நடும் விழா!!
கன்னியாகுமாரி பாராளுமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதிக்கு 27.3.2024 அன்று வருகை தர உள்ளார்.
இந்நிலையில் அவரின் வருகையை முன்னிட்டு அதற்கான கால்கோள் நடும் விழாவானது இன்று 22.3.2024 காலை 10 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் கழக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் N.தளவாய்சுந்தரம் அவர்களின் அறிவுறுத்தல் படி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பசிலியான்நசரேத் , விளவங்கோடு இடைத்தேர்தல் கழக வேட்பாளர் ராணி மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி நகர பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி நகர பேரூர் ஊராட்சி கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் முன்னிலையில் விழா நடைபெற்றது.
-P.இந்திரன்.
Comments