கோவையில் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்துச் சென்றக் கும்பலை கைது செய்த காவல்துறை...!!!


கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியில் வசிக்கும் நித்யநதி(53) என்பவரது வீட்டில் கடந்த 13.02.24 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து நித்யநதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த சுமார் 22 சவரன் தங்க நகையை  பறித்து சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும்  இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

இந்த நிலையில்  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  அய்யனார்(எ) மீசை அய்யனார்(72), கர்நாடக மாநிலத்தைச்  முருகன்(எ) ராமு (55), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை(எ) ராஜா (50) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனியப்பா ராமலிங்கம்(எ) ராஜேஷ்(42) ஆகியோரை பிடித்து புலன் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையில்  ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 22 சவரன் தங்க நகை மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம்  ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும என காவல்துறை தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments