வீடு கட்டுபவர்களுக்கு அதன் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் வகையில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் ரூப் காலம் பவுன்டேஷன் எனும் புதிய ப்ராண்டை அறிமுகம் செய்தது!!

கோவை : வீட்டின் மிக முக்கியமான பகுதிகளான கருதப்படும் அடித்தளம், மற்றும் பில்லர் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில், பிரபலமான டால்மியா சிமெண்ட்ஸ் ரூப் காலம் பவுன்டேஷன் எனப்படும் புதிய வகை சிமெண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக புதிய அறிமுகம் குறித்து பேசிய டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புனித்டால்மியா,

கடந்த 8 தலைமுறைகளாக மக்கள் மத்தியில் டால்மியா சிமெண்ட்ஸ் நல்ல பெயரை பெற்றுள்ளது.மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் தற்போது உள்ள சூழ்நிலையில் வீடு கட்டுவதற்கு முக்கிய பங்காற்றும் பில்லர்கள், மற்றும் தரைதகளங்களின் வலிமையை மேம்படுத்தும் வகையில் இந்த ரூப் காலம் பவுன்டேஷன் ப்ராண்டை அறிமுகம் செய்துள்ளதாகவும், வீடு கட்டுபவர்களுக்காக மட்டுமின்றி ஒப்பந்ததாரர்களுக்கும் இதன் செயல் திறனை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது என்றார். 

மேலும் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் விளம்பர தூதராக சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் இடம் பிடித்துள்ளார். சரியான தேர்வுகளுடன் ஒரு வீட்டை கட்ட இளம் தலைமுறையினருடன் இணைந்து நிற்கும் சக்தியை இந்த புதிய புதிய சிமெண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் சமீர் நாக்பால், மற்றும் விற்பனையாளர்கள் டீலர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments