பாராளுமன்ற பொது தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வாக்காளர் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி!

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில்  பாராளுமன்ற பொது தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி ராமச்சந்திரா நகரில் இருந்து புறப்பட்டு எடமலைப்பட்டி புதூர் பிரதான சாலை அரசு காலணி வழியாக ராமச்சந்திரா நகர் வரை பேரணி நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மன் ராஜசேகரன் தலைமையில், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்  ராமதாஸ் சிவகுமார் மணிமாறன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆலோசகர் எட்மண்ட் வில்லியம் நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன் செயலாற்று குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஸ்ரீரங்கம் பால் குணா லோகநாத் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் முனைவர் குணசேகரன், மேலாளர் எழில் ஏழுமலை,  முன்னிலையில் இந்திரா கணேசன் கல்லூரி செவிலியர் மற்றும் எண் முறை மருத்துவ மாணவிகள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட இந்தியக் குடிமகனான நான்,  நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும்,  சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் கண்ணியத்தையும் நிலை நிறுத்தவும்,  ஒவ்வொரு தேர்தலிலும்  அச்சமின்றி,  மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது எந்தத் தூண்டுதலின் தாக்கமும் இல்லாமல்  வாக்களிப்போம் என வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழி ஏற்றவுடன்  பாராளுமன்ற பொது தேர்தலில்  தேர்தலில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.           

 நாளை வரலாறு செய்திகளுக்காக, 

-பாலமுருகன் தஞ்சாவூர்.

Comments