வால்பாறை பகுயில் உயர் மின் கோபுர விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் முறையான பராமரிப்பின்றி எரிவதில்லை. 

இது பற்றி பலமுறை வால்பாறை நகராட்சி ஆய்வாளர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரு சில மின்விளக்குகள் விட்டு விட்டு எரிகின்றன. வால்பாறை வட்டார பகுதிகளில் விழா காலங்களில் பொதுமக்கள் அதிகளவு கூடும் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அருகாமையில் காந்தி சிலை அருகாமையில் ஸ்டேட் மோர் சந்திப்பு அருகாமையில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில்  உயர்மின் கோபுர விளக்கு அமைத்தும் சரிவர எரிவதில்லை என வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து உள்ளனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யகுமார், வால்பாறை.

Comments