போக்குவரத்து துறை அமைச்சருக்கு வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கோரிக்கை!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயலாளர் P.பரமசிவம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQமனுவில்;
கோவை மாவட்டம்,வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலானவை பாதுகாப்பற்றதாகவும், தரமற்றதாகவும் இயக்கப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானோர் அரசு பேருந்துகள் மூலம் தான் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது இன்றியமையாதது. இதை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பான பேருந்துகள் இயக்கவும் வால்பாறையில் இருந்து பெரம்பலூர், மதுரை, பொன் அமராவது மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன். தற்பொழுது தமிழக அரசால் இப்பகுதியில் உள்ள மகளிர் நலனை கருத்தில் கொண்டு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை துவக்குவதற்கு வால்பாறைக்கு வருகை தந்த தாங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் வருகை வால்பாறை பகுதி ஏழை எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் பேருந்து சேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தியடைய உதவியாக இருக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments