10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ல் தொடங்கிஏப்ரல் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மாணவர்களின் விடைத்தாள்கள், மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களில் இதுநாள் வரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின்  விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்குகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் அடுத்த 8 வேலை நாட்களில் நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10ம்  தேதி வெளியாகும்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments