கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது!!
.
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து,16ம் தேதி கொடியேற்றம், பூச் சாட்டு, 18ம் தேதி அக்னிச்சாட்டு, 19ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 20ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 21ம் தேதி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடந்தன.
இதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிஸ்கோல் குழுக்கள் நிறுவனத் தலைவர் டி எஸ் பி கண்ணப்பன் புஷ்பவல்லி குடும்பத்தார் அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டு மாரியம்மனை தரிசித்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments