கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி இளம் பெண்ணிடம் 90 ஆயிரம் ரூபாய் மோசடி!!!
கோவை கவுண்டம்பாளையம் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கயல்விழி(25). எம்பிஏ பட்டதாரியான இவர் வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் தன்னை பிரியதர்ஷினி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் தான் ஆன்லைன் விற்பனை செயலி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ. 12. 80 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அந்த காரை நீங்கள் பெற செயல்பாட்டு கட்டணம், சாலை வரியாக ரூ. 89 ஆயிரத்து 600ஐ அனுப்பி வைத்தால், எங்களது ஊழியர்கள் உங்களது முகவரிக்கு காரை கொண்டு வந்து ஒப்படைப்பார்கள் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய கயல்விழி அந்த பெண் கூறிய வங்கி கணக்கில் 89, 600 ரூபாயை அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் சொன்னபடி அவருக்கு கார் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கயல்விழி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments