பாஜகவை வீழ்த்த அறிய வாய்ப்பு - இலவசம் வளர்ச்சி அல்ல வீழ்ச்சிதான்... கொளுத்தும் வெயிலில் விளாத்திகுளத்தில் வாகன பரப்புரை மேற்கொண்ட சீமான்!

வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் என்பவரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கொளுத்தும் வெயிலில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாகனப்பரப்புரையில் ஈடுபட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாண்டி, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேஷ்குமார், நகரச் செயலாளர் செய்யது யூசுப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;

பாஜகவை வரலாறு ஒரு அறிய வாய்ப்பு தந்திருக்கிறது அதுதான் இந்த தேர்தல். குடிக்க குடிநீர் இல்லை ,உண்ண உணவில்லை, சுவாசிக்க காற்றில்லை, வேலை வாய்ப்புகள் இல்லை,  இதுவரை அநீதி இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைத்திருக்கிறது,இந்த நாட்டின் அவலம் குறித்து கடந்த 13 ஆண்டுகளாக உங்களுக்கு உணர்த்தினேன்,32 லட்சம் மக்கள் எனக்கு வாக்கு செலுத்தி என்னை மூன்றாவது கட்சியாக உயர்த்தினர், மூன்றாவதாக வந்த உங்கள் மகன் முதலிடத்திற்கு வருவது உங்கள் கையில் தான் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உங்கள் வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம். அதை அநீதிக்கு எதிராக, அக்கிரமத்திற்கு எதிராக, ஊழல் லஞ்சத்திற்கு எதிராக, அடக்குமுறை ஒடுக்கு முறைக்கு எதிராக ,இந்த கொள்கைகளுக்கு எதிராக உயர்த்துங்கள் மடிக்கணினி இலவசம் தந்தவர்கள் சைக்கிள் இலவசம் தந்தவர்கள் கிரைண்டர் இலவசம்  வந்தவர்கள் ஏன் குடிக்க தண்ணீரை இலவசமாக தரவில்லை . இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்,

விவசாயிகள் வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டு சாகின்றனர்  அதை என்றைக்காவது கேட்டது உண்டா,60 ஆண்டுகால ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கூட வக்கத்தவர்களாக நம் தாய்மார்களை வைத்தது யார்,மாதந்தோறும் 3000 ரூபாய்க்கு குடிநீர் வாங்கும் போது ஆயிரம் ரூபாய் வைத்து என்ன செய்ய முடியும்,இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல வீழ்ச்சி திட்டம்,வளர்ச்சி என்பது வெற்று வார்த்தை,இலவசம் பெறாமல் என் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கனவு காண்கிறோம்,உலகத் தலைவர்கள் முழங்கியது இந்த மைக்கில் தான் - அது தான் எங்கள் சின்னம் என்றார். மேலும், கொளுத்தும் வெயிலில் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாகனப்பரப்புரையில் சீமான் பேசிக்கொண்டிருப்பதை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலையாமல் நின்று தொடர்ந்து கேட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments