பா.ஜ.க.கூட்டணியை ஆதரிப்பதாக, தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் கோவையில் அறிவிப்பு!!

சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.கூட்டணியை ஆதரிப்பதாக, தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் கோவையில் அறிவிப்பு!!

தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜம் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் குமார் கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஈழுவா திய்யா சமுதாய மக்கள் கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட தமிழகம் முழுவதும், சுமார் 10 (பத்து) இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளதாக தெரிவித்த அவர், எங்கள் சமூக மக்கள் ஸ்ரீ நாராயண குரு தேவனை வழிபடுவதாக கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஸ்ரீ நாராயண குரு ஆன்மீகத்தையும் கல்வி அறிவையும் ஒருங்கே எங்களது சமுதாயத்திற்கு நல்கி வழி நடத்தியதாக தெரிவித்த அவர்,சமீப காலமாக,. ஆன்மீகத்தில் சனாதன தர்மத்தை பின்பற்றி வாழ்ந்து வரும் எங்களது மனதை சில மூத்த அரசியல்வாதிகள் ஹிந்துக்களை மட்டும் மையப்படுத்தி அறுவறுக்கத்தக்க வகையிலும் ஆபாசமான வகையிலும் விமர்சிப்பதாக வேதனை தெரிவித்தார்.

எனவே இது போன்று விமர்சப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும் சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி அவர்களை அரியணையில் அமர்த்திட தமிழகமெங்கும் தமிழக பா.ஜ.க தலைவர் த அண்ணாமலை  தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளை எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல்  சமுதாய மக்கள் முழுமையாக ஆதரிக்க தீர்மானத்துள்ளதாக அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது பொது செயலாளர் ராகவன்,பொருளாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments