பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய மாதிரி ஐ.நா சபை கூட்டம் நடைபெற்றது!!

உலகம் பொருளாதார பிரச்சினை மற்றும் ஒற்றுமை குறித்து மாதிரி ஐநா சபை அமைத்து கோவை பள்ளி மாணவர்கள் விவாதித்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய மாதிரி ஐ.நா சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட 12 முதல் 16 வயதுடைய  மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஜி20,யுனெஸ்கோ,யுஎன்எச்ஆர்சி,டபிள்யூஎச்ஓ,யுஎன்எஸ்சி,நேட்டோ உள்ளிட்ட  40 முக்கிய குழுக்களை குறிப்பிட்டு மாதிரி ஐநா சபை போல் வடிவமைத்து ஒவ்வொரு மாணவர்கள் இருக்கையில் ஒவ்வொரு நாட்டின் பெயர் பலகை வைத்து ஐநா சபையில் உரையாடுவது போல் மாணவர்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து உரையாடி விவாதித்தனர்.

இந்த மாதிரி ஐநா சபை ஐக்கிய நாடுகள் சபையில் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிக்கும் மூலம் மாணவர்களுக்கு அரசு ஆளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும்,பொது வெளியில் பேசும் திறன்,ஆராய்ச்சி திறன், சொல்லாட்சி திறன், மாணவர்களின் ஒத்துழைப்பு இந்த மாதிரி ஐ.நா சபை பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் இளைஞர்களின் கல்வி எதிர் காலத்தை மேம்படுத்தி உலகிற்கு தேவையான தகவல்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையே இந்த மாதிரி ஐ.நா சபை பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தினர்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் சிறப்பாக செயலாற்றாமல் வெளி உலக அறிவு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐநா சபையில் எவ்வாறு உலக நாடுகள் விவாதிக்கிறதோ அதேபோல் மாணவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். முன்னதாக தென்னிந்திய மாதிரி ஐநா சபை நிகழ்வை மத்திய சேமக் காவல் படை (crpf) துணை ஆணையர் ராஜேஷ் டோக்ரா மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சோனாலி கீீட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் இந்தியன் பப்ளிக் பள்ளியின் தலைமை நிர்வாக அலுவலர் தாரா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments