தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது!!
கோவை சரவணம்பட்டியிலுள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் "வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது. பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு, கருத்தரங்கினை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அவர் கூறியதாவது ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்குத் தேவையான மதிப்புகளை கூறி மதிப்பு கல்வியின் அவசியத்தையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி மேனாள் முதல்வர் மற்றும் தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துரையில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICSSR)-ன் முதுநிலை ஆய்வாளராக உள்ள முனைவர்.எஸ்.ராஜகுரு. சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது அவர்கள் வாழ்க்கையில் குறிக்கோள்களை தெளிவாக முடிவெடுத்தல் தன் சுயமரியாதை, மற்றும் உறுதி தன்மையை கைவிடாமல் தனித்தன்மையுடன் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் துணைத்தாளாளர் அக்ஷய் தங்கவேல்அவர்கள் கற்றலில் உள்ள கலைநயம், அனுபவ அறிவை பயன்படுத்துதல் மற்றும் அடுத்தவர் நிலையை புரிந்துணர்தல் போன்ற மதிப்புகளை விளக்கிக் கூறினார்.
முனைவர் எஸ்.ராஜகுரு அழகப்ப பல்கலைக்கழகம், தாளாளர் திருமதி. சாந்தி தங்கவேலு மற்றும் துணைத் தலைவர். அக்ஷய் தங்கவேல் அனைவரும் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.
கோவை finvest நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் கிருஷ்ணகுமார் நிதி கல்வியறிவை ஒருங்கிணைத்தல் இந்தியாவில் தேவையை அதிகரிப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நிதி அறிவானது ஆசிரியர்களுக்கு தேவை என்பதை பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு மாவட்டத்தின் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் சுமார் 350 மாணவர்களுக்கு மேல் பங்கேற்றனர்.
Comments