அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் மகா அன்னதானம் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து,16ம் தேதி கொடியேற்றம், பூச் சாட்டு, 18ம் தேதி அக்னிச்சாட்டு, 19ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 20ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 21ம் தேதி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடந்தன.இறுதி நாளானஙின்று தமிழில் இலட்சார்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் குடும்பத்தினர் சார்பாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபம் மற்றும் கோவிலை சுற்றி உள்ள இடங்களில் அன்னதானம் பரிமாறப்பட்டது. இதில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.
-சீனி, போத்தனூர்.
Comments