ஆட்டிசம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்!!

கோவை பீளமேட்டிலுள்ள சேஜ் கிட்ஸ் என்ற ஆட்டிசம் சிகிச்சை மையம், கோவை நகர ரோட்டரி க்ளப், நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும்  இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கழக கோவை சேப்டர் ஆகியோர் இணைந்து  லக்ஷ்மி மில் வளாகத்தில் ஆட்டிசம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் தூத்துக்குடி திருச்சிலுவை முத்துக்கள் சிறப்பு பள்ளி ஆட்டிச மாணவர்கள் நடனமாடினர். கற்பகம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் நடனமும், விழிப்புணர்வு பொம்மலாட்டமும் நடைபெற்றது. மேலும் இதில் சிறப்பம்சமாக ஏராளமான குழந்தைகள் கைவினை விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச்சென்றனர். 

சேஜ் கிட்ஸ் நிர்வாக இயக்குனர்  சுமையா ஜெரார்ட் ஆட்டிசம் என்றால் என்ன என்பது பற்றியும், ஆட்டிசத்தின் அறிகுறிகள பற்றியும், ஆட்டிசக்குழந்தைகள் படும் இன்னல்கள் பற்றியும், இதற்கான சிகிச்சைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

ஆரம்பக்கட்டத்திலேயே ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் இக்குழந்தைகள் பிற குழந்தைபளிடமிருத்து தனிமைப்படுத்தப்படுவதிலிருந்தும் விலக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கமுடியும் பிற normal குழந்தைகள் போன்றே கல்வி பெறவும் வாழவும் முடியும் என்று கூறினார். 

இந்நிகழ்ச்சிகளை ஜீ டிவி தொகுப்பாளர் கனாகாணும் காலங்கள் புகழ் டாம் ஃபராங் தொகுத்து வழங்கினார். இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கழக கோவை சேப்டர் தலைவர் டாடர் லக்ஷ்மி சாந்தி மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி முதல்வர் சிஸ்டர் மேரி ஃபேபியோலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேஜ் ஹெல்த் ஃபவ்ண்டேஷன் நிறுவனர் டாக்டர. ஜெரார்ட் வினோத் நன்றி கூறினார். ரோட்டரி நிர்வாகிகள் திருவாளர்கள் கணேசன் ப்ரசாந்த், டாக்டர் செந்தில்குமார் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் இளைஞர் நலத்துறை இயக்குனர் டாக்டர் ரோசரி மேரி, உளவியல் நிபுணர் திருமதி ரேஷ்மா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

-சீனி, போத்தனூர்.

Comments