கோவையை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்!!

.

கோவை எக்வைன் ட்ரீம்ஸ் ஹார்ஸ் ரைடிங் பள்ளியைச் சேர்ந்த வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். 

60 செ.மீ  ஷோ ஜம்பிங்  போட்டியில் , ஹாசினி மற்றும்  அர்ஜுனுடன் இணைந்து முதலிடத்தைப் பெற்றார். 75 செ.மீ மற்றும் 80 செ.மீ ஷோ ஜம்பிங் போட்டியில், நிதின், தயா மற்றும் மனோஜ் ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், டிரஸ்ஸேஜில் பிரிவில் நர்தன்யா, அதிதேவ் மற்றும் அச்சலா ஆகியோர் நேர்த்தியையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தினர்.

80 செ.மீ  ஷோ ஜம்பிங் நிகழ்வில் ஹாசினி மற்றும் அர்ஜுன் மற்றும் ஓபன் பிரிவில் சிவகுமாரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம்  குறிப்பிடத்தக்க வெற்றிகளை எக்வைன் ட்ரீம்ஸ் கிளப் வீரர்கள் பெற்றனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதன் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி கூறுகையில், சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகளில் நம்முடைய கிளப் சார்பில் 10 மாணவர்கள் கலந்து கொண்டு 80 சதவீத பரிசுகளை வென்றுள்ளனர். 

இதில் சென்னையில் நடந்தது மாநில அளவிலான போட்டி, புதுவையில் நடைபெற்றது தேசிய அளவிலான போட்டியாகும். மாணவர்கள் அனைவரும் தனித்தனியே பல்வேறு குதிரையேற்ற போட்டிகளில் கந்து கொண்டு வெற்றிபெற்றனர். 

எங்களுடைய எக்வைன் ட்ரீம்ஸ் கிளப் 2014 -ல் துவங்கப்பட்டது. இதில் பயிற்சி பெரும் பல மாணவர்கள் மாநில மற்றும் தேசியளவில் பல பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது  100- க்கும் மேற்பட்டவர்கள் எங்களிடம் பயிற்சி பெற்றுவருகின்றனர்.இதில் முக்கியமாக மாணவி ஹாசினி 2024 -ல் ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் அவர் 2030 -ல் தாய்லாந்தில் நடைபெறவுள்ள யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஷோ ஜம்பிங் பிரிவில் கலந்துகொள்ள கடுமையாக பயிற்சியெடுத்து வருகிறார் என்றார்.

-சீனி, போத்தனூர்.

Comments