எப்போதும் வென்றான் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்!
நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அதேபோன்று அரசியல் கட்சியினர் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு அங்கிருக்கக்கூடிய தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் எட்டையபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு பின்னர் தனது சொந்த ஊரான எப்போதும் வென்றானில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.
Comments