கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குறைந்த விலையில் முழுஉடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில்  உலக சுகாதார தினம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டாக்டர். ஆதித்யன் குகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2  முழு உடல் பரிசோதனை திட்டங்களின் பெறப்படும் நன்மைகள் பற்றி விளக்கினார்.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாஸ்டர் ஹெல்த் செக்அப் பற்றிய போதிய விழிப்புணர்வுடன், ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வோடு, சமூகத்தை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு சமூகம் உருவாகும் என்று நான் கருதுகிறேன் என்றார். 

மேலும் அவர் கூறுகையில், ஏ.ஜி.எஸ்  ஹெல்த்கேர் மையம் இந்த 76வது உலக சுகாதார தினத்தன்று, மக்களை எளிதாக சென்றடையும் வகையில் இரண்டு மிகவும் குறைந்த விலையில்   முழு உடல் பரிசோதனை திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

முதல் பரிசோதனை திட்டமானது இரத்தம், சிறுநீர், இமேஜிங்மற்றும் பல ஆலோசனைகளுடன் கூடியஇந்தியாவின் மிகவும் மலிவு விலையில்தலை முதல் கால் வரைவிரிவான முழு உடல் பரிசோதனையை இங்கே நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்,ரூ. 6000 மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் அனைத்தும்  76வது உலக சுகாதாரதினத்தை முன்னிட்டு ரூ. 600/- க்கு முழு உடல்பரிசோதனை செய்யப்படுகிறது.  மேலும் முதல் 50 பதிவுகளுக்குஇலவச மல்டி வைட்டமின் / புரோட்டீன்சாச்செட்டுகள் கூடுதலாக வழங்கப்படும். இந்தசலுகை விலை பரிசோதனை திட்டமானது  ஏப்ரல் 7முதல் 13 வரை செல்லுபடியாகும்,என்றார். 

இரண்டாவது திட்டம் ஒரு வருடத்திற்கான நீண்டகாலத் திட்டமாகும், இது குழு முன்பதிவுகள் (Bulk booking), அடுக்குமாடிகுடியிருப்புகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மிகவும் மலிவு விலையில் \ தலை முதல் கால் வரைமுழு உடல் பரிசோதனை திட்டமாகும். ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் முன்பதிவு செய்தால் ரூ.7,500 மதிப்புள்ள  இந்தபரிசோதனை ரூ. 3750 க்கு  பெறமுடியும். என்றார்.

-சீனி, போத்தனூர்.

Comments