தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி .!!!

 

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் ஓட்டப்பிட்டாரம்  வட்ட வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி  06.04.2024 சனிக்கிழமையன்று நடந்தது. மேற்படி  நிகழ்வில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்கமாக CVGIL எனும் செயலி மாணவிகளால் சித்தரித்துக் காட்டப்பட்டு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் சுமார் 200 மாணவியர்களைக் கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியிலிருந்து தொடங்கி வேலவன் பல் பொருள் அங்காடி வரை நடைபெற்றது.


இந்நிகழ்வை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தலைவர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் செயலர் சொ.சுப்புலட்சுமி மற்றும் பொறுப்பு முதல்வர் முனைவர் க. சுப்புலட்சுமி ஆகியோர் தலைமைதாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் திரு.ச.வசந்தகுமார், வருவாய் ஆய்வாளர் ஓட்டப்பிட்டாரம், திருமதி.பெ.வாசுகி, வருவாய் ஆய்வாளர் வேடநத்தம், திருமதி.சு.செல்வ லெட்சுமி, வருவாய் ஆய்வாளர் எப்போதும் வென்றான்,


கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் முனைவர்.அபிநய பாரதி, முனைவர்.வசந்த சேனா, முனைவர்.அனிஷ்டா,  முனைவர். பொ.யோகேஸ்வரி நித்யா மற்றும் முனைவர்.மு.ரா.மஜிதா பர்வீன் ஆகியோர்  ஒருங்கிணைத்து  சிறப்பாக நடத்தினார்கள். 


மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் சாலையில் உள்ள வேலவன் பல்பொருள் அங்காடியின் முன்பு கல்லூரி மாணவிகள் ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மாணவி வசந்தகுமாரியின் பேச்சு, தெருக்கூத்து, நடனம்,சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக பொது மக்களிடையே  வாக்குரிமை குறித்த முக்கியத்துவத்தையும் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தியும் வாக்காளர்கள் தங்களைப் பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ளக்கூடிய CVIGIL எனும்  செயலி குறித்தும் 1950 என்ற இலவச எண் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .  இந்நிகழ்வின் இறுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் தேர்தல் உறுதி மொழியை ஏற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments