ஓட்டப்பிடாரம் அருள்மிகு ஸ்ரீ உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம் பெருமாள் கோவில் இருந்து கோட்டை தெரு வ.உ.சி தெரு வழியாக அம்மன் சன்னதி வந்து அடைந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா துவங்கியது. அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதிகாலை முதல் இரவு வரை அம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடந்தது. மேலும் ஓட்டப்பிடாரம் சித்தி விநாயகர் மற்றும் வடக்குப்பரும்பூர் விநாயகர் கோயிலிலிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மன் சன்னதிக்கு சென்றனர். பின்னர் சிறப்பு பூஜைகளும், அம்மனுக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. நள்ளிரவு அம்மன் திருத்தேர் சப்பரத்தில் நகர்வலம் செல்லும் வைபவம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் வைபவமும் நடந்தது
தேர்தல் நடத்த விதிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சிகள் மாட்டுவண்டி பந்தயங்கள் நடைபெற முடியவில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments