சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள வசந்தம் நகர் மற்றும் லவ்லி கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சுண்ணாம்பு கலவாய் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக வின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும் தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி MLA அவர்கள் கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ரஹீம், மண்டல அமைப்புச் செயலாளர் அபுதாஹிர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் இக்பால்  தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் இப்ராஹிம் பாதுஷா மற்றும் அஇஅதிமுகவின்   மாநில மாவட்ட,  பகுதி கழக நிர்வாகிகள்  CTC. ஜப்பார், மதனகோபால், உசேன், முந்திரி கோபால், கரும்புக்கடை முஜி,டாக்டர் முஸ்தபா, HS. பாவா, தங்கம் ரகூப், உதுமான், சேட், அலி, மார்கெட் முத்தலி, S.I.நசீர், காளவாய் அபு,ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இஸ்லாமியர்கள் மற்றும் அதிமுக கட்சியின் நிர்வாகிகளும் எஸ் டி பி ஐ கட்சியின் தொண்டர்களும் தொழிற்சங்கத்தினரும் வர்த்தக அணியினரும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய S.P.வேலுமணி அவர்கள் தமிழகம் முழுவதும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் தேமுதிக,  SDPI, புதிய தமிழகம், பார்வேடு பிளாக் ஆகிய கட்சிகளின் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக SDPI கட்சி தொண்டர்கள் பலம் பொருந்திய கட்சியாக இருப்பதால்  தமிழகம் முழுவதும் உள்ள எல்லா தொகுதிகளிலும் அதிமுக தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில்  உள்ள  கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை கூட்டணி கட்சியிருடன் இணைந்து பணியாற்றி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக அதிமுக கட்சியினரும் எஸ்டிபிஐ கட்சியினரும்  அயராது உழைத்து பாடுபட வேண்டும் என கூறினார்.

மன்சூர்

மாவட்ட செயலாளர்.

-சீனி, போத்தனூர்.

Comments