மூணாறு எல்லப்பட்டி புனித குழந்தை தெரேசா தேவாலயத்தில் 106 வது ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அருகில் அமைந்துள்ள எல்லப்பட்டி புனித குழந்தை தெரேசம்மாள் தேவாலயத்தில் சுய மரியாவின் அடையவும் புனித குழந்தை தெரேசாவினுடையவும் 106 வது ஆண்டு திருவிழா கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் துவக்கமாக 17:05:2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெஸ்ட் டிவிஷனில் இருந்து திருப்பவணியாக புனித குழந்தை திரைசாம்மாள் கொடி ஆடம்பரமாக ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு தேவாலயத்தில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது, அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
திருப்பலியை சிறப்பிப்பதற்காக அருட்தந்தை ராஜன் அவர்கள் மற்றும், விக்டர் மேஜர் காந்தளூர் பங்குத்தந்தை, எல்லப்பட்டி தேவாலயத்தின் பங்குத்தந்தை அலெக்ஸாண்டர் மற்றும் துணை பங்குத்தந்தை டின்டோ அவர்களும் மிக ஆடம்பரமாக திருப்பலி நிறைவேற்றினர். திருவிழாவின் இரண்டாவது தினமான 18:05:2024 சனிக்கிழமை அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் புனித சுரூபங்களை திரு பவனியாக பெஸ்ட் டிவிஷனில் இருந்து தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது திருப்பலியை சிறப்பிப்பதற்காக அருட்தந்தை ஆண்டனி ராஜ் கன்னிசேரி பங்குத்தந்தை திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தவுடன் வாகனங்களுக்காக சிறப்பு ஆசிர்வாதங்களும் நடைபெற்றது. 19:05:2024(ஞாயிற்றுக்கிழமை) அன்றைய தினம் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் துவங்கியது ஜெபமாலை முடிந்தவுடன் சிறப்பு திருவிழா திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியை சிறப்பிப்பதற்காக அருட்தந்தை அகஸ்டின் ஆசீர் கோட்டையம் பங்குத்தந்தை அவர்கள் பங்கெடுத்தார்கள். திருப்பலியில் பங்கு அளவில் இளைஞர்கள் ஆண்ட துவக்க விழா கே சி ஒய் எம் மற்றும் நிர்வாகிகளுடைய உறுதிமொழியும் செயல் திட்டம் வெளியிடுதல் இவைகளும் அருட்தந்தை அகஸ்டின் ஆசீர் தலைமையில் தேவாலயத்தில் நடைபெற்றது. திருப்பலி நிறைவேற்றி முடிந்தவுடன் திரு சுரூபங்களை எல்லப்பட்டி போஸ்ட் ஆபீஸ் வரை திருபவனியாக கொண்டு செல்லப்பட்டு இறுதியாக தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்பின் விருந்துகள் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பங்கு தேவாலயங்கள் ஆன குண்டலை, செண்டுவாரை, அருவிக்காடு, சிட்டிவாரை, டாப் ஸ்டேஷன், பழத்தோட்டம் ஆகிய கிளை தேவாலயங்களில் திருப்பலி எதுவும் நடைபெறவில்லை கிளை தேவாலயங்கள் உள்ள பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக நான்கு முப்பது மணி அளவில் அனைத்து கே சி ஒய் எம் இளைஞர்கள் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலை நிகழ்ச்சிகளை தலைமை தாங்கியது எல்லப்பட்டி கே சி ஒய் எம் யூனிட் மற்றும் குண்டலை கே சி ஒய் எம் யூனிட் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலை நிகழ்ச்சிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாடல்கள் பாடியும் நடனமாடியும் கதைகளை கூறியும் கலை நிகழ்ச்சிகளை மிக ஊக்குவித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஏராளமான கிறிஸ்தவ விசுவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கெடுத்து திருவிழாவை மிகச் சிறப்பாக நடைபெறச் செய்தனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா, மூணாறு.
Comments