மத்திய வாரிய உயர்நிலைக் கல்வி சி.பி.எஸ்.இ.2023-24 தேர்வு முடிவுகளில் 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன் சாதனை படைத்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகள்!!


அண்மையில் வெளிவந்த சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்,40 மாணவ,மாணவிகள் 480 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மத்திய வாரிய உயர்நிலைக் கல்வி சி.பி.எஸ்.இ.2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40  மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

இந்நிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீ சைதன்யா பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா நீலாம்பூர் பகுதியல் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் திருமதி சுஷ்மா போபண்ணா மற்றும் திருமதி சீமா போபண்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை பொது மேலாளர் ஹரி பாபு முன்னிலை வகித்தார்.இதில்,பத்தாம் வகுப்பில் நீலாம்பூர் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர் விபின் 495 மதிப்பெண்கள் பெற்று மண்டல அளவில் முதல் மதிப்பெண்ணையும், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்., இதே போல தர்ஷனா 493 மதிப்பெண்களும்,

492 மதிப்பெண்கள் பெற்ற சம்ப்ரீதி,491 மதிப்பெண்கள் பெற்ற மேதாஸ்ரீ,490 மதிப்பெண்கள் பெற்ற ஹரிணி,நிகிதா உட்பட 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 40 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பூச்செண்டுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இதே போல பன்னிரெண்டாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்த சந்தோஷ்  486 மதிப்பெண்கள் எடுத்த மாலிகா,483 மதிப்பெண்கள் எடுத்த கார்னிகா  சம்யுக்தா 481 மதிப்பெண்கள் பெற்ற நாரா தேஷ் நிகிதா ரெட்டி 480 மதிப்பெண்கள் எடுத்த பூமிநாதர்ஷன் 480 மதிப்பெண்கள் எடுத்த அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதே போல 25 மாணவ,மாணவிகள் 475 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்..இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சைதன்யா பள்ளி முதல்வர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments