மே தினத்தை முன்னிட்டு க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் நீர் மோர் பந்தல்!!

மே தினத்தை முன்னிட்டு க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை அமைத்து வருகின்றனர்..இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு, க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில்  நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.வள்ளியம்மை பேக்கரி அருகில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவில்,

சிறப்பு அழைப்பாளர்களாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,மாமன்ற உறுப்பினர் முபஷீரா,உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.இதில் பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில் ,தர்பூசணி,ஆப்பிள்,ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, 

க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு நிர்வாகிகள்,அசாருதீன்,கலீல் ,முஸ்தபா,இப்ராஹீம் ஆகியோர் செய்திருந்தனர்..நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,ராதாகிருஷ்ணன்,டால்பின் ரபி, கபூர்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments