கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல், சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர் மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ்  காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மனிதர்களில் இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதனால் ஏற்படுகிறது' என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் இல்லை என்றும் முனெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உள்ளிட்ட பூச்சிகளால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- கேரளாவில் மிரட்டும் வகையில் வேகமாக பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சலில் 100 இல் 80 பேருக்கு அறிகுறி தெரியாது. கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நைல் காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறித்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மூலம் துப்பரவு பணிகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments