கோவை வந்த ரயிலில் ஓட்டை..! மழையில் பயணிகள் அவதி!!!

சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் மழை வெள்ளம் மேற்கூரிலிருந்து அதிக அளவில் கசிந்ததால்  பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் உள்ள 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் மதியம் 2:30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இந்த ரயில் மாலை 4:15 மணிக்கு கோவை வந்தடைந்தது.

இரண்டு முப்பது மணிக்கு ரயில் வந்தடையும் என தனியார் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளின் உறவினர்களும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர்.

வயதான பயணிகள் சரியான நேரத்திற்கு மதிய  உணவு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments