கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா நடைபெற்றது!!
கார் பிரியர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்,கார் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது.
காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த புதிய டைசர் காரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற குறிப்பிடத்தக்க வசதிகள் இடம்பெற்றுள்ளன.. செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன..
இப்படி பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஐந்து வேரியண்டுகளுடன் அறிமுகமாகி உள்ள அர்பன் க்ரூசர் டைசர் கார் விற்பனைக்கான முன்பதிவுகள் நடைபெற்று, வருவதாக விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில், ஆனமலைஸ் டொயோட்டாவின் வாடிக்கையாளர்கள் மற்றும் தலைவர் காளிசாமி ,துணை தலைவர் பிரசாந்த் கிருஷ்ணன்,சி.எஃப் ஓ. .கண்ணன்,விற்பனை பிரிவின் துணை தலைவர் யுவராஜ்,மனித வள மேம்பாட்டு அதிகாரி, பி.என். செந்தில் குமார் ,சர்வீஸ் பிரிவின் துணை தலைவர் சந்தோஷ் குமார், ஈச்சர் வாகன துணை தலைவர் ராஜன் மற்றும் ஆனமலைஸ் டொயோட்டா அனைத்து ஊழியர்களுடன் பல்வேறு காப்பீடு நிறுவன அதிகாரிகளும், வங்கி நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments