சூரியநல்லி பகுதியில் இரண்டு சக்கர வாகனம் விபத்து.. மூன்று பேர் பலி?!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னகானல் கிராம பஞ்சாயத்து சண்முகவிலாஸ் என்ற பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் மணி என்பவருடைய மனைவி அஞ்சலி வயது 25 என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவருடன் தன்னுடைய 4 வயது கொண்ட அமையா என்ற பெண்குழந்தை  மற்றும் தன் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் பிரேக் பிடிக்காததால் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அம்மா மற்றும் மகள் இருவர் மரணம் அடைந்தனர்.

உடனடியாக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் எந்த ஒரு பலனும் இல்லை. மிகவும் காயமடைந்த அஞ்சலி தமிழ்நாட்டில் உள்ள போடிநாயக்கனூருக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தற்பொழுது தெரியவந்துள்ளது. 

இச்சம்பவத்தில் அக்குடும்பத்தையும் உறவினர்களையும் பெரும் துயரத்தில் அழ்த்தியுள்ளது.வாகன எண் kl 69C 2571.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments