கொளுத்தும் வெயிலில் தொடர்ச்சியாக மின்சார தடை... மக்கள் அவதி??

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதியை சுற்றி அமைந்திருக்கும் அடிமாலி பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மின்சார தடை தொடர்ச்சியாக ஏற்படுவதால் பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள் கோடைகால மழை பெய்யாததினால் தண்ணீர் நீர் வரத்து குறைந்ததால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும் அதிக நேரம் மின்சார தடை வெயில் நேரங்களில் ஏற்படுவதால் மின்விசிறிகளை இயக்கவோ வேலை செய்பவர்களுக்க்கும் கம்யூட்டர்களை அதிக நேரம் பயன்படுத்துவது கடினம் மற்றும் வீட்டில் குளிர் சாதன பெட்டிகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். 

அதிலும் அதிகமாக இரவு நேரங்களில் மின்சார தடை ஏற்படுவதால் மக்கள் தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத காரணத்தினால் பெரிதும் அவதிப்படுவதாக கருதுகின்றனர் எனவே உடனடியாக மின்சார துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments