கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்!! கல்வித்துறை எச்சரிக்கை!!

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள்  கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments