தமிழக அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள்,ஆலயங்கள் ஆகியவற்றை  நிர்மாணித்தல், புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளை எளிமைப்படுத்திய தமிழக அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி நன்றி தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,நீண்ட காலமாக, தமிழகத்தில் புதிதாக பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டுத் தலங்கள் நிர்மாணித்தல், மற்றும் புனரமைப்புப் பணிகள் செய்வதற்கும் பல ஆண்டு  காலமாக நடை முறை  சிக்கல் இருந்து வந்தது. இதை, இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பிலும், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உள்ளிட்டோர்  தமிழக முதலமைச்சர் திராவிடமாடல் நல்லாட்சி நடத்திவரும்  மு.க.ஸ்டாலின்  கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண கோரிக்கை வைத்தோம்.அதன் படி அண்மையில்,

சிறுபான்மையினமக்களின் வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்க்கு தடையில்லா சான்று பெற இருந்த நடைமுறைகளை எளிமையாக்கி தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..அதேபோல ,  பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் கட்டிட பராமரித்து பணி மேற்கொள்ள வருடத்திற்கு 10 கோடி அதிகரித்து  நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர்,

கோவையில் இஸ்லாமியர் பெண்கள் கல்லூரி துவக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வக்பு வாரிய நிலத்தில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி உடனடியாக துவக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.. கோவையில் பழமை வாய்ந்த  ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசல்  மயான இடத்தை வணிக வளாகமாக  மாற்றக்கூடாது என வலியுறுத்திய அவர்,

ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசலக்கு சொந்தமாக  கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதோடு,  அனைத்து சமுதாய மக்களுக்கும் உயர்க்கல்வி பயிற்சி சென்டர் ஒன்றை அதே இடத்தில்  உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..இந்த சந்திப்பின் போது, பல் சமய நல்லுறவு இயக்க  மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹிர்,  செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இஸ்மாயில், மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன்,  கோவை  தல்ஹா ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments