உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், இந்திய அளவில் 390 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவர்!!

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், இந்திய அளவில் 390 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவர் உள்ளிட்ட, கோவை ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

சென்னை ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 எனும் நுழைவு தேர்வை சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் 26ம் தேதி நடத்தியது. 

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற இந்த தேர்வை  எழுத இந்தியா முழுவதிலும் இருந்து 1,80,200 பேர் விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இத்தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இத்தேர்வுக்காக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட நாண்கு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் இம்மையத்தில் பயிற்சி பெற்ற ஸ்ரீ ராம் என்ற மாணவர் இந்திய அளவில் 390 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

அவ்வாறு சாதனை படைத்த 4 மாணவர்களையும் இன்று கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் மையத்தில் பயிற்சி ஆசிரியர்கள் பாராட்டு விழாவை இன்று  முன்னெடுத்தனர். இ

தில்  மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரபட்ட  மாணவர்களுக்கு மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தியும், கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் ஆர தழுவி இந்த வெற்றியை  கொண்டாடினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணவன் ஸ்ரீ ராம் கூறும் பொழுது.

நாடு முழுவதும் இந்த தேர்வு மிகவும் கடினம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தேர்வை எவ்வாறு எதிர் கொள்ளுவது என சிறப்பு பயிற்சி அளிக்க பட்டு வருகினற்து. மேல்ம் தேர்வு களை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி தேர்வுகளையும் வைத்து கூடுதல் கவனம் செலுத்தினர். மேலும் பயிற்சி ஆசிரியர்கள் எந்த சந்தேகங்களையும் எளிதில் புரியும் வகையில் எங்களுக்கு கற்று தந்தனர். 

ஆகாஷ் பயிற்சி மைய ஆசிரியர்களின் அதீத கற்பித்தல் திறன் காரணமாகவே இந்த தேர்வை எளிதில் எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளதாக கூறினார். இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் மைய வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா, மற்றும் ஆகாஷ் எஜுகேஷனல் பயிற்சி மைய துணை இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி, பீளமேடு கிளை மேலாளர் நவீன் குமார், ஆர் எஸ் புரம் கிளை மேலாளர் செந்தில் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments